கடுமையான தண்டனைகள் மூலம் தான் இவர்களைத் திருத்த வேண்டும். நான் யாழ்ப்பாணத்திற்கு வரும்போது நினைத்துக் கொண்டு வந்தது இதைத்தான்…..காவாலிகளே!! காமுகர்களே!!
அட்டகாசம் செய்யும் மாணவர்களே! அவர்களின் பெற்றோர்களே!! கேட்டுவிட்டு அவதானமாக இருங்கள்
தாம் முன்நோக்கி செல்லுகின்ற நேர்வழியில் எதிர்படும் எந்தவிதமான தடைகள் ஏற்படினும் அதனை எதிர்கொண்டு முன்னோக்கி செல்லப்போவதாக யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சர்வோதைய அமைப்பின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் யாழ்ப்பாணத்தின் கல்வி கலாசாரம் என்பவற்றை 1970ஆம் ஆண்டில் இருந்தவாறு மாற்றப்போவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு சகலரும் தம்முடன் இணைந்து ஒத்துழைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
1970ஆம் ஆண்டு நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் நிரப்பிய யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்வி தரம் இன்று 21ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டார்.
தண்டனை தான் சமூகத்தை திருத்தும் என்ற போதிலும் மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்பட கூடாது என்பதே தமது வாதம் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.தண்டனைகள் மூலம் யாழ்ப்பாணத்தில் சிறந்த சமூகத்தை உருவாக்குவது தமது கடமை எனவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது பொதுமக்களின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டார்.சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் தம்மை தற்காப்பதற்கான உரிமை சட்டத்தில் உள்ளதாகவும் அவர் கோடிட்டு காட்டினார்.
யாழ்ப்பாண குடாநாட்டு பெண்கள் இரவு 12 மணிக்கு யாழ்ப்பாண நகரில் தாம் சுதந்திரமாக திரிகிறோம் என்ற குரல் எழும்பும் போதே தாம் யாழ்ப்பாண மாவட்டத்தை விட்டு வெளியேறப் போவதாக நீதிபதி இளஞ்செழியன் குறிப்பிட்டார்.