யாழ் மாவட்ட உதைபந்தாட்ட அணிகளுக்கு இடையே மைலோ வெற்றிக் கிண்ணத்திற்காக மூன்றாவது ஆண்டாக இம்முறையும் இடம்பெறவுள்ளது. யாழ் மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவினால் நடத்தப்படும் இந்த உதைபந்தாட்டப் போட்டி சம்பந்தமான கலந்துரையாடல் நேற்று இரவு வியாழக்கிழமை யாழ்ப்பாணம் கிறீன்கிறாஸ் ஹோட்டலில் யாழ்ப்பாணம் பிராந்திய முகாமையாளர் எஸ்.ரவீந்திரன் தலைமையில் நடை பெற்றது.
யாழ்ப்பாணம் வலிகாமம் பருத்தித்துறை வடமராட்சி தீவக உதைபந்தாட்ட லீக்குகளின் தலைவர்கள் செயலாளர்கள் பொருளாளர்கள் உட்பட பங்குபற்றும் கழகங்களின் முகாமையாளர்கள் அணித் தலைவர்கள் விளையாட்டு அலுவலர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனா்.
இந்தப் போட்டியில் முதற்தடவை நடை பெறும் போது 24 கழகங்களும் இரண்டாம் தடவை நடைபெறும் போது அறுபது கழகங்களும் இந்தாண்டு நடை பெறும் போட்டியில் நூறு கழகங்களும் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில் நந்தனன் யாழ்ப்பாணம் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.ஜெயசிங்கா, நெஸ்லே நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் சுகத் சஜிவ விக்கிரமசிங்க
,யாழ் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆர்.மோகனதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனா;








