நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் வட மாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரின் முதலாவது சுற்றில் வல்வை அணி நேற்று கருணாகரன் அணியுடன் மோதியது. இதில் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வல்வை அணி 1:0 என்ற கோல் கணக்கில் கருணாகரன் அணியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் 14 ஆவது நிமிடத்தில் வல்வை அணியினர்க்கு கிடைத்த தண்ட உதையை வல்வை அணி வீரன் சுதாகரன் கோலாக மாற்ற முற்பாதியில் வல்வை அணி 1:0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் பிற்பாதியில் வல்வை அணி வீரர்களுக்கு இலகுவாக கோல் போடும் சந்தர்ப்பங்கள் பல கிடத்தபோதும் வல்வை அணியின் முன்கள வீரர்கள் அவற்றை கோலாக மாற்ற தவறினர். இறுதியில் 1:0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது. இப் போட்டியின் ஆட்ட நாயகனாக வல்வை வீரன் S.பிரசாந் தெரிவுசெய்யப்பட்டார். 2வது சுற்றில் வல்வை அணி யாழ் மாவட்ட முன்னனிக் கழகமான சென்மேரீஸ் அணியுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இச் சுற்றுப்போட்டியில் சம்பியனாகும் அணிக்கு 200,000.00/- ரூபாவும், இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 100,000.00/- ரூபாவும், மூன்றாம் இடத்தை பெறும் அணிக்கு 50,000.00/- ரூபாவும், நான்காம் இடத்தை பெறும் அணிக்கு 25,000.00/- ரூபாவும் லீக் சுற்று வரை முன்னேறும் அணிகளுக்கு தலா 10,000.00/-ரூபாவும் பருசுத்தொகையாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.