வல்லை கடல் நீரேரிக்குள் மூழ்கி இளைஞன் காணாமல் போயுள்ளார்.

0
492 views

வல்லை கடல் நீரேரிக்குள் மூழ்கி இளைஞன் காணாமல் போயுள்ளார்.

அச்சுவேலி வல்லை பாலத்தின் கீழ் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக அச்சுவேலி பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம் பெற்றுள்ளது. சிறு மீன்படி நடவடிக்கையில் ஈடுபடும் சிலர் இன்றைய தினம் குறித்த கடல் நீரேரி பகுதிக்கு வருகை தந்துள்ளனர். இதன்போது வந்த ஆறு மீனவர்களும் பாலத்தின் கீழ் கேரட் பகுதியில் இருந்து மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது மீனவர் ஒருவரின் செருப்பு தண்ணீருக்குள் விழுந்து உள்ளது.

செருப்பினை எடுப்பதற்கு ஆழங்கூடிய பகுதியில் இறங்கிய பொழுது குறித்த இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போய் உள்ளார்.

சக மீனவர்கள் கயியிரிணை கொடுத்து காப்பாற்ற முயற்சி செய்த பொழுதும் அது பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால் அச்சம் அடைந்த ஏனைய இளைஞர்கள் குறித்த பகுதியில் இருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளனர். பின்ன நடந்த விடயத்தினை பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு நீரில் காணாமல் போன இளைஞன் புத்தூர் கலைமதி பகுதி சேர்ந்த பாஸ்கரன் லக்ஸன் வயது 19 என அச்சுவேலி பொலிசார் தெரிவித்தனர்.

காணாமல் போன இளைஞனை தேடும் பணியில் பிரதேச இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here