யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு வார காலம் கடந்துள்ள நிலையில் முக்கிய நகரங்களில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
ரஷ்யப் படையெடுப்பால் 10 லட்சம் யுக்ரேன் மக்கள் நாட்டைவிட்டு புலம் பெயர்ந்துள்ளனர் – ஐ.நா.
யுக்ரேனின் துறைமுக நகரான கெர்சனை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது ரஷ்ய படைகள்.
வெளிநாட்டு மாணவர்களுக்கு ஹாட்லைனை திறந்துள்ளது யுக்ரேன்.
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர், மூன்றாம் உலகப் போர் என ஒன்று வந்தால் அது அணுஆயுதப் போராகதான் இருக்கும் என்றும் ஆனால் அதுகுறித்து ரஷ்யர்கள் ஏதும் சிந்திக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் பெலாரஸை சேர்ந்த வீரர்கள் நாளை முதல் தொடங்கவிருக்கும் குளிர்கால பாராலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் தங்களுக்கு போர் விமானங்களை அனுப்புமாறு கோரிக்கைவிடுத்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த ஸெலன்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“உங்களால் யுக்ரேனுக்கு மேல் விமானங்கள் பறக்க தடை விதிக்க முடியவில்லை என்றால், எங்களுக்கு விமானங்களை கொடுங்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்ய அதிபர் புதினுடன் நேரடியாக உரையாடுவது மட்டுமே போரை தடுப்பதற்கான ஒரே வழி எனவும் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
“நாங்கள் ரஷ்யாவை தாக்கவில்லை. எங்களுக்கு ரஷ்யாவை தாக்குதம் திட்டமில்லை. உங்களுக்கு என்ன வேண்டும்? எங்களின் நிலத்தை விட்டுவிடுங்கள்.” என்றார்.