கப்பலுடையவர் கோவில் தேர்த்திருவிழா உபயகாரர் திரு திருமதி இரத்தினசிகாமணி (குண்டைய்யா ) சாந்தி அவர்களால் புதிய சித்திரத்தேர் நிர்மாணித்துக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளதையொட்டி புதிய சித்திரத்தேர் அடிக்கல் 24-11-2021 புதன்கிழமை நாட்டப்பட்டுள்ளது.
16 அடி உயரமும் 9 அடி அகலமும் கொண்டதான புதிய சித்திரத்தேரானது , வாகனங்களுக்கு பொருத்தப்படும் சக்கரங்களோடு அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும் திருவிழாவில் கோவிலின் உள் வீதியில் வலம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமையவிருக்கும் சித்திரத்தேரின் மாதிரி வடிவம்