வடக்குக்கு வந்தது1 89,500 கிலோ சீனி.
தட்டுப்பாடு விரைவில் நீங்கும்!
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சீனித் தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யும் வகையில், ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 500 கிலோகிராம் சீனி எடுத்துவரப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் சீனியின் ஆகக்கூடிய சில்லறை விலை 130 ரூபா என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் கிளைகள் ஊடாக பாவனையாளர்களுக்கு மட்டுமே சீனியை விற்பனை செய்யமுடியும். மொத்தமாக சீனியை விற்பனை செய்யமுடியாது என்று வடக்கு மாகாண சபை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மு.நந்தகோபாலன் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 89 ஆயிரம் கிலோகிராம் சீனியும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 39 ஆயிரத்து 500 கிலோகிராம் சீனியும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு தலா 20 ஆயிரம் கிலோகிராம் சீனியும், மன்னார் மாவட்டத்துக்கு 18 ஆயிரம் கிலோகிராம் சீனியும் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஹிங்குரானை சீனித் தொழிற்சாலையிலிருந்து, மேற்படி மாவட்டங்களின் சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக சீனி இறக்குமதிசெய்யப்பட்டுள்ளது என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.








