கிளிநொச்சி மாவட்டத்தில் 37 பேர், யாழ்.மாவட்டத்தில் 33 பேர் என வடக்கு மாகாணத்தில் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 460 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில்,
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 04 பேர், பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேர்,
பளை பிரதேச வைத்தியசாலையில் 12 பேர் என கிளிநொச்சி மாவட்டத்தில் 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 04 பேர், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர், பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் 03 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், யாழ்.மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர் என யாழ்.மாவட்டத்தில் 33 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 05 பேர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர், மாமடு பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், செட்டிகுளம் தார வைத்தியசாலையில் ஒருவர் என வவுனியா மாவட்டத்தில் 09 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர், மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் ஒருவர், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர் என முல்லைத்தீவு மாவட்டத்தில் 08 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 07 பேரும், காங்கேசன்துறை கடற்படை முகாமில் 04 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.








