வாள் வெட்டித்துறையில் வாழ்ந்தவர் நீங்கள் இன்னும் வாழ்வீர்கள் …….

0
1,178 views

வாள் வெட்டித்துறையில் வாழ்ந்தவர் நீங்கள் இன்னும் வாழ்வீர்கள்

நாகர் இனம் வாழ்ந்த எம் ஊர் மண் தாசிந்தாள்மண் என்று மணல் மேடாக வாழ்தவர்கள் நாம்.
வள்ளியின் பட்டியில் வாழ்வு தொடங்கிய நாம் வள்ளிபட்டி ஊரவர் ஆனோம்;
காலம் கரைய அன்னியன் படை கரை ஒதுங்காமல் கரைகாத்து நின்றவர்களால் கரையாரனோம்.
பரதேசிகள் கள்ளர் கூட்டம் அந்த 700ம் கரை ஒதுங்குவதற்கு முன்னர் வாள் கொண்டு கரைகாத்து நின்றோம். வாள்வெட்டி என்று வாழ்ந்த இனத்தில் கரைகாத்த மக்கள் வாள்வெட்டிமக்களானோம்.
ஊருக்கு உரித்தான ஓர்மத்தால் கலங்கள் நாமே அமைத்து பண்டமற்று வாணிகம் செய்தோம்.

அந்த பரதேசிகள் கள்ளர் கூட்டம் 700ம் வாள் வெட்டிமண்ணில் கரை ஒதுங்கியிருந்தால் நாகர் இனமக்களின் வாழ்வியல் புதுவிதமாக வரையப்பட்டிருக்கும்.
அப்போதும் வேலுப்பிள்ளையின் மூதாதையர்; வாழ்ந்தார்கள் தான்.

ஆங்கிலேயன் முதல் பறங்கியன் வரை நாகர் நாட்டுக்கு வந்தார்கள்
பாசை மாற்றங்களால் கப்பலோடி துறைமுகம் அமைத்த எங்களை வாள்வெட்டித்துறை என்றார்கள்
ஆனால் வந்தான் வரத்தான் வல்வெட்டித்துறை என்று பதிந்து போனார்கள்.
ஊரில் படையப்பா மாதிரி படை சூழவாழ்ந்தவர்தான் பெருமகனார் சேவரத்தினா.
தோழால் துண்டு எடுத்து நமஸ்கரித்து சென்றார்கள் அயலுரவர்கள்.
ஆதிதொட்டு அயலவன் எவரும் வாள்வெட்டித்துறையில் மாலை ஆறுமணிக்கு மேல் தங்கமுடியாது என்ற எழுதாத சட்டத்தால் நீண்ட காலம் வாழ்ந்தவர்கள் நாம்.

எங்கள் பாலியண்ணாவின் வாழ்வியல் வசந்தங்கள் அனைத்தும் வாள்வெட்டித்துறை மக்களுடன் பின்னிப்பிணைந்த வல்வையர்;
நீலங்களின் பொன்விழா மலரில் பறையப்பட்டுவிட்டது.
இது எழுதப்பட்டுக் கொண்டு இருக்கும் போது யாரடா எமது ஊரின் பெயரை வல்வை என்று சுருக்கியது பாலியண்ணாவின் குரல் கேட்பது மாதிரி இருக்கின்றது.
பாலியண்ணாவுடன் சிதம்பராக்கல்லூரி மற்றும் கிரேக்க கப்பலில்
ஒன்றாக பணிபுரிந்து ஒன்றாக பயனித்தவன்
திருமணம் முடித்து அதுவும் ஊரில் அடுத்தநாள் கால்மாறும் சடங்கு கோயில் போகாமல் பந்தடி இறுதியாட்டத்துக்காக தட்டிவானில் ஏறிவந்தவர்.

இங்கிலாந்து வாள்வெட்டித்துறை மக்களுடன் இறுக்கமான வாழ்வியியலை கொண்டிருந்தார்.
தேசியத்துடன் நெருக்காமான உறவால் இங்கிலாந்து மக்கள் வருட வருடம் கொண்டாடும் மைந்தர்கள் விழாவை கோடை விழாவாக மெருகூட்டிய பெருமை பாலியண்ணாவை சேரும்.
தேசியத்தின் பெரும் தலைகள் மாற்றம் என்பதுதான் மாறது
என்ற பொன் வாசகத்தில் வரலாறு சமைத்தவர்கள்.

வாள்வெட்டித்துறையின் வரலாற்றில் அரசியலிலும் சரி விளையாட்டுத்துறையிலும் சரி
மறைந்தவர்களும் இன்று வாழ்ந்து கொண்டு இருப்பவர்களும்
மது புகை வெற்றிலை பண்பற்ற செயலை தவிர்த்ததால் வாள்வெட்டித்துறை வரலாற்றை ஜெயபாலியண்ணா வரை வரைந்து கொண்டு இருக்கின்றார்கள்.

யாழ் குடா நாட்டில் நடைபெற்ற லாலா சோப் 73கழகங்கள் பங்கு கொண்ட 7.5 அடி உயர
வெற்றிகிண்ணப் போட்டி.. தினகரன் பத்திரிகையின் இறுதியாட்டம்..
யாழ் முற்றவெளி இறுதியாட்டம் இவை போன்று இன்னும் பல வாள்வெட்டித்துறையின்
வீரவாசத்தை இலங்கை தனது வரலாறாக பதிந்து கொண்டது.

கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் கோணர் கிக் அடித்து
நேரடியாக போல்போட்ட வீரன் குட்டித்தம்பியண்ணா அவர்கள்
பாலியண்ணா காலத்து சாட்சியாக இருக்கின்றார்.

மறைந்தும் மறையதவர்களை ஆத்மா விடுதலைபெற்ற பின்
புகழ்பாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
ஜெயபாலியண்ணாவுடன் ஊர் வாழ்வு கப்பல் வாழ்வு இங்கிலாந்தில் வல்வை அரங்கு அமைப்பதற்கான பணி உலக வல்வையர் ஒன்றியம் ஆரம்பகால பணிகள் கோடைவிழா என்ற பெயர் மாற்றத்தில் கருத்து முரண்பாடு நிறையவே நினைவலைகளை சுமக்கின்றேன்.
மனம் மிகவும் பாரமாக கனக்கின்றது
ஜெயபாலியண்ணா திருமணத்துக்கு அன்று அம்பாளின் பழைய கோபுரப்படம்
பரிசாக தந்து என் வாழ்வுக்கு உங்களிடம் ஆசிர்வாதம் வாங்கியது ஞாபகத்தில் உள்ளது.

ஊர் புகழ்பாட நீங்கள் விதைத்தவை நாளை நல்ல சமுதாயததால் விளைச்சலை தரும்.
உங்கள் தம்பி சின்னண்ணா ஊர் இன்ஸ்பெக்கரர் பத்ததிரானாவுடன் ஒற்றக் ஒற்றை
நேரில் இறங்கடா சண்டைக்கு என்று கேட்ட ஓர்மம்தான்
மே2009 உலக வரலாற்றில் வாள்வெட்டித்துறையின் வாசம் வரையப்பட்டது.

ஜெயபாலியண்ணா நீங்கள் வாள்வெட்டித்துறையில் வாழ்ந்தீர்கள்.
இன்னும் 100 ஆண்டுக்கு பின் வாழப்போகும் சமுதாயத்துக்காக ஊர் வாசமுடன்
வாழ்ந்தவர்கள் வாழ்வியல் பொக்கிச புதையலாக பாதுகாக்கப்படும்.

ஓம் சாந்தி

வல்வை வாசமுடன்
குட்டிமாமா இங்கிலாந்து.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here