சுகாதார பிரிவினரின் அறிவுத்தல்களை மீறி போட்டிகளில் பங்கு பற்றிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருடன் விளையாடிய 12 பேர் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டதுடன் அவர்களுக்கான PCR பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
கரவெட்டி சுகாதார பிரிவில் அல்வாய் மைக்கல் மைதானத்திற்கு பின்புறமாக வசித்து வரும் ஒரு இளைஞருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த நபர் கடந்த 26 ம் திகதி கொழும்புக்கு சென்று டயலொக் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நேர்முகப் பரீட்சைக்கு தோற்ற முற்பட்ட போது குறித்த நபரை PCR பரிசோதனை மேற்கொண்டு வருமாறு பணித்துள்ளனர். குறித்த நபரும் கொழும்பு நவலோகா வைத்தியசாலையில் பணம் செலுத்தி பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு 27ம் திகதி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து குறித்த நபரை உறவினர்கள் தனி போக்குவரத்தில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். குறித்த நபர் வடமராட்சி பகுதியில் நடைபெற்ற போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். எனவே சமூகத் தொற்றைக் குறைக்க அனைவரும் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.








