மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்

0
789 views

மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஓய்வுநிலை ஆயர் பேரருட்திரு கலாநிதி அதிமேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை தமது 80வது வயதில் 01.04.2021 இன்று வியாழக்கிழமை அதிகாலை சுகயீனம் காரணமாகக் காலமானதாக, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை அடிகளார் உறுதிப்படுத்தியுள்ளார்.

இறைபணியில் மட்டுமல்லாது ஏழை எளிய மக்களின் வாழ்விலும் தனது அக்கறையையும், அதீத கரிசனையையும் கொண்ட வழிகாட்டியாக சிறப்புற்று விளங்கியவர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள்.

நீண்டகாலம் உடல்நலக்குறைவினால் ஓய்வுநிலையில் இருந்த மன்னார் மறைமாவட்ட ஆயர், யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர் மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here