தொண்டமானாறு கடலில் அடித்துச் செல்லப்பட்டு சிறுவன் உயிரிழப்பு

0
682 views

வடமராட்சி, தொண்டமானாறு சின்னக் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்பு சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் 21.02.2021 நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.

உடுப்பிட்டி சந்தை பகுதியைச் சேர்ந்த நல்லைநாதன் அவர்காஸ் (வயது 17) சிறுவனே கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

ஒரே பகுதியை சேர்ந்த 9 பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெறுள்ளது. மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here