உடுப்பிட்டி கலாசார மத்திய நிலையத்தில் கலை வாத்தியங்கள் மற்றும் மொழிசார்ந்த கற்கை நெறிகளைத் தொடர்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க விரும்புவோர் கலாசார மத்திய நிலையம் 15 ஆம் கட்டை, உடுப்பிட்டி தெற்கு, உடுப்பிட்டி என்ற முகவரிக்கு எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு முன்பாக அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி கலாசார மத்திய நிலையத்தில் பரதநாட்டியம், வயலின், மிருதங்கம், நாடகமும் அரங்கியல் மற்றும் சித்திரம் போன்ற பாட நெறிகளும் நெல்லியடியில் சங்கீதமும் வதிரியில் ஆங்கிலமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








