இலங்கையில் 40மில்லியன் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம் கொள்ளை

0
719 views

கம்பஹா – மிரிஸ்வத்த பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடல் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை மதியம் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்தோடு முகத்தை முழுவதுமாக மறைக்கும் முக கவசம் மற்றும் கறுப்பு ஆடை அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நிதி நிறுவனத்தில் புகுந்து அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் 5 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here