மாற்றுதிறன் கொண்ட குழந்தைகளுக்கு- தர்மம் அறக்கட்டளையால் தொடரும் உதவிகள்

0
843 views

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு,  மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கும் முதல் திட்டத்தை தர்மம் அறக்கட்டளை தொடங்கியது. கடந்த சில மாதங்களாக, ‘2020ம் ஆண்டின் முடிவு’ என்ற புதிய பிரச்சாரத்தை நாங்கள் தொடங்கினோம். உலகின் பெரும் தொற்றுநோய் இருக்கும் ஒரு நேரத்தில் எங்களிடமிருந்து உதவி தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினோம்.  நேற்று, மார்கழி  மாதம் 3ம் திகதி ‘சர்வதேச மாற்றுத்திறனாளிகள்  தினம்  என நினைவு கூறப்பட்டுள்ளது.  இந்த அற்புதமான நோக்கத்துக்காக 10 மாற்றுத்திறனாளிக்குழந்தைகளுக்கு ஆதரவாக  50,000 ரூபாய் வழங்க முடிந்தது  என்பதை அறிவிப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்.

Covid-19 விளைவுகள் இருந்த போதிலும் நாம்  முன்னேற்றம் மற்றும்   குழந்தைகள் முகத்தில் ஒரு புன்னகையை   ஏற்படுத்தியதற்காக பெருமைப்படுகிறோம்.  ஒவ்வொரு சிறு பங்களிப்பும் குழந்தைகளுக்கு மதிப்பு மற்றும் மரியாதையையும் உணரவைக்கும், அதே  நேரத்தில் இந்த ஆண்டில்  நாம்  எமது இலக்கை எட்டியுள்ளோம். குழந்தைகளுக்கு புத்தகங்கள், பள்ளி போக்குவரத்து, மற்றும் சிறப்பு உபகரணங்கள் போன்ற கல்வி வளங்கள் சம்மந்தமாக  உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். வரும் ஆண்டில் மாற்றுத் திறனாளிக்குழந்தைகளின் திறமைகள் வெளிவர அவர்களுக்கு ஆதரவு வழங்கக்கூடிய  மக்களிடம்

விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். உங்களுடைய  தொடர்ச்சியான ஆதரவுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here