பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்றைய தினம்( 02-10-2020) ஹாட்லிக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை ஸ்ரீ தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண விளையாட்டுத் திணைக்களப்பணிப்பாளர் பா.முகுந்தன் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினராக ஹாட்லிக் கல்லூரி அதிபர் எஸ்.முகுந்தன் ஓய்வு நிலை அலுவலர் எஸ். குமார் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக ஆசிரியர்களான பா.தணிகைவேல், சி.ஜெகதலப்பிரதாபன், சர்வதேச குத்துச்சண்டை வீரன் எஸ்.சானுஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இறுதி முடிவுகளின்படி 12 தங்கப்பதக்கங்கள் ,16 வெள்ளிப்பதக்கங்களைப் பெற்று இரண்டாம் இடத்தினை வல்வை விளையாட்டுக்கழகமானது பெற்றுக்கொண்டது. கடந்த வருடமும் வல்வை விளையாட்டுக்கழகமானது இரண்டாமிடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற எமது வீர வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

























