வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட மாகாண மட்ட மேசைப் பந்தாட்டத்தில் ஆண்கள் பெண்கள் பிரிவில் சம்பியனாகியது யாழ் மாவட்ட அணி.
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட மேசைப்பந்தாட்டத்தின் இறுதியாட்டம் மன்னார் உள்ளக விளையாட்டரங்கில் நேற்று இடம் பெற்றது.
ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் யாழ் மாவட்ட அணியும் கிளிநொச்சி மாவட்ட அணியும் மோதின. இதில் யாழ் மாவட்ட அணி 3:0 என வென்று சம்பியனாகியது. இதில் மூன்றாமிடத்தை மன்னார் மாவட்ட அணி பெற்றது.

தொடர்ந்து இடம்பெற்ற பெண்களுக்கான ஆட்டத்தில் யாழ் மாவட்ட அணியும் கிளிநொச்சி மாவட்ட அணியும் மோதின.மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற ஆட்டத்தில் 3:2 என வெற்றி பெற்று சம்பியனாகியது யாழ் மாவட்ட அணி, மூன்றாமிடத்தை மன்னார் மாவட்ட அணி பெற்றது.







