மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி

0
619 views

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்திலிருந்து நாடு திரும்பிய இருவருக்கும், கந்தக்காடு முகாமில் தங்கியுள்ள கைதி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இந்த தகவலை இன்று தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,126 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here