எரிபொருள் கப்பலில் பாரிய தீ விபத்து

0
565 views

அம்பாறை சங்கமன்கந்த கடற் பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பலில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

பனாமா அரசுக்கு சொந்தமான “MT NEW DIAMOND“ என்ற கப்பலே இவ்வாறு தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கப்பலின் எஞ்ஜின் அறையில் ஏற்பட்டுள்ள தீ விபத்து தற்போதுவரை பிரதான எரிபொருள் தாங்கி வரையில் பரவவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கப்பலில் 23 பேர் கொண்ட குழுவினர் இருப்பதாகவும் அவர்களின் உதவிக்காக இலங்கை கடற்படையின் மூன்று கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. மாலுமி ஒருவர் காயங்களுடன் ஸ்ரீலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளார் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கப்பலில் இருந்த ஊழியர்கள் 18 பேர் காப்பாற்றப்பட்டு வேறு ஒரு கப்பலில் ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here