எதிர்வரும் முதலாம் திகதி முதல் வடமராட்சி வலயப் பாடசாலைகள் அனைத்தும் வழமை போன்று நடைபெறுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடமாராட்சி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி அ.பார்த்தீபன் அறிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா அனர்த்தம் காரணமான மூடப்பட்ட பாடசாலைகள் சில சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி சில வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு தரம் 10, 11 மற்றும் 12 ஆகியவை காலை 07.30 மணிதொடக்கம் பிற்பகல் 03.30 மணிவரை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சுமுக நிலையை அடுத்து அனைத்து தரங்களையும் மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனையடுத்து எதிர் வரும் முதலாம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளையும் காலை 7.30 மணிமுதல் 01.30 வரை இயங்குவதற்கு நடவடிக்கைககளை மேற்கொள்ளுமாறு சகல பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.







