யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவர் உயிரிழப்பு

0
765 views

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் ஒருவர் மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

அந்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்று விசாரணைகளின் பின்னரே தெரிய வரும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பளையைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் பணியாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 17ஆம் நோயாளர் விடுதியிலிருந்தே அந்தப் பெண் வீழ்ந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here