31 ஆம் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பும், நன்றி நவில்தலும்.
அன்னையின் மடியில் 03.06.1939. ஆண்டவன் அடியில் 24.032020.
ஆண்டுகள் எண்பத்திரண்டு
அவணியில் நீங்கள் வாழ்ந்திடினும்,
ஏனின்று நீங்களில்லையென்ற எண்ணம்
எம்முள்ளே விசாலமாய்.
தூணாகி தலைமுறையைத்
தாங்கி நின்றீர்கள் – இன்று
தடுமாறி நிற்கின்றோம்
தங்கள் ஆசி வேண்டி.
மீண்டும் மீண்டும்
நீங்கள் வேண்டும் – நம்
வம்சத்தின் வாரிசாக
வளரும் மழலையாக.
சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!
திருமதி. மெஞ்ஞானமாலை தணிகாசலம் (கலாநிதி ஸ்டோர்).
கடந்த 24.03.2020 அன்று இறைவனடி சேர்ந்த எமது அன்னையின் அந்தியேட்டிக்கிரிகைகள் 23.04.2020. வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெறும்.
அன்னாரின் மரணச்செய்தி அறிந்து இல்லம் நாடி நேரில்வந்து எமக்கு பலவழிகளில் உதவியும், ஒத்தாசையும் புரிந்தவர்களுக்கும்; இறுதிநிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்க்கும்;நேரி லும்,தொலைபேசியிலும்,சமூகவலைத் தளங்கள்,மூலமாகவும் ஆறுதலும் அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு வெளிநாட்டு உற்றார் , உறவினர்கள் , நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளை கள்.
இலங்கை: கலாநிதி, பிறேமச்சந்திரன்(ராஜ் அண்ணா) மோகனகுரு.
பிரித்தானியா: திருக்குட்டி, ராசுக்குட்டி, பகிரதி, சிறிதர்









