20.03.2020 அன்று அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச்சட்டம் 24.03.2020 இன்றைய தினம் தளர்த்தப்பட்டதை அடுத்து அத்தியாவசியப் பொருட்களை மக்கள் முண்டியடித்துக் கொண்டு கொள்வனவு செய்தனர்.
கொரோனா வைரஸ் சர்வதேச ரீதியாக பெரும் அச்சத்தையும் பெரும் பீதியையும் ஏற்படுத்தியதை அடுத்து பொது மக்களின் நன்மை கருதி நாடாளவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்து.
இந்த ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 02.00 மணிக்கு நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்த காலஅவகாசத்தில் தமக்கான பொருட்களைப் பெற்றுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வல்வெட்டித்துறை, நெல்லியடிப் பகுதிகளிலுள்ள பல்பொருள் வர்த்த நிலையங்கள், சந்தைகள், மருந்தகங்கள் , எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் பூட்சிற்றி, வங்கிகள் என்பவற்றிற்கு முன்னால் நீண்ட வரிசையில் நின்று மக்கள் பொருட்களை கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது. வல்வெட்டித்துறை பகுதியில் பொலிசார் கடமையில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



















