தேசிய மட்ட கடற்கரைப்பந்தில் மீண்டும் மூன்றாமிடத்தைப் பெற்றது தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம். அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கடற்கரை கரப்பந்து நீர்கொழும்பு கடற்கரையில் இடம்பெற்றது.நேற்று இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் மதவாச்சி மைத்திரிபாலசேன மகாவித்தியாலத்தை எதிர் கொண்ட தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை அணி 21:18, 21:17 என தோல்வியடைந்தது.
இதனையடுத்து மூன்றாமிடத்துக்கான ஆட்டத்தில் ரூவன் வெல்லவை வெற்றி கொண்டு மூன்றாமிடத்தை பெற்றுக் கொண்டது.










