வல்வெட்டித்துறை கப்பலுடையவர் மின்னமைப்பின் களஞ்சிய அறை இனம்தெரியாத நபர்களால் தீ வைப்பு

0
1,110 views

கப்பலுடையவர் மின்னமைப்பின் களஞ்சிய அறை இனம்தெரியாத நபர்களால் தீ வைப்பு;

வல்வெட்டித்துறை மதவடியில் அமைந்துள்ள கப்பலுடையவர் மின்னமைப்பின் களஞ்சிய அறையானது, இன்று அதிகாலை 2.00 மணியளவில் இனம்தெரியாத நபர்களினால் தீ வைத்து எரியூட்டப்பட்டுள்ளது. இந்த மிலேச்சத்தனமான சம்பவத்தினால், 250ற்கு மேற்பட்ட மின்விளக்குகள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் தடிகள், இந்திர விழாவின் போது வாழை கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் தடிகள் உற்பட பல அலங்கார பதாதைகள் மற்றும் கப்பலுடையவர் மின்னமைப்பின் அலங்காரப் பொருட்கள் உற்பட்ட, பல இலட்சங்கள் பெறுமதியிலான பொருட்கள் முற்றுமுழுதாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதுடன், களஞ்சிய அறையின் மேற் பரப்பு(கோப்பிசம்) முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது.

அதிகாலை 2.00 மணியளவில் கதவினை உடைத்து உள் நுழைந்த, குறித்த இனம்தெரியாத நபர்கள் அங்கிருந்த களஞ்சிய அறையில் ரயர் மற்றும் பெற்ரோலின் உதவியுடன் ஏரியூட்டிவிட்டு தப்பித்துள்ளனர். தெய்வாதீனமாக தீ பற்ற ஆரம்பித்த சமயத்திலே அயலவர்களால் அவதானக்கப்பட்டதனால், அருகில் இருக்கு வீடுகளுக்கு தீ பரவுபதற்கு முன் பலத்த போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.  இதனால் உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதுடன், அருகில் இருந்த பல குடிமனைகள் மற்றும் மின்பிறப்பாக்கி அறை என்பனவற்றில் தீ பரவுபது தவிர்க்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில், களஞ்சிய அறைக்கு அருகிருந்த ஓர் வீட்டின் மீதும் தீ பரவியிருந்ததுடன் அதுவும் சிறு சேதத்துடன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரனைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். வல்வெட்டித்துறை நகர சபையின் செயளாலர் நேரடியாக கப்பலுடையவர் களஞ்சிய அறைக்கு வருகை தந்து நிலமைகளை ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here