நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த பாடசாலை நடவடிக்கைகளுக்கு பதிலாக வேறு நாட்களில் பாடசாலைகள் நடைபெற மாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரால் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இரண்டாம் தவணைக்கான கற்றல் மற்றும் பரீட்சை செயற்பாடுகள் வழமை போன்று சாதாரண முறையில் இடம்பெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளில் அனைத்து பாடவிதானங்களும் உள்ளடங்கும் வகையில் நேர அட்டவணையில் திருத்தங்கள் செய்யவும்இ மாணவர்களின் வரவில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் வழமை போன்று கல்வி நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்இ கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 22ம் திகதி ஆரம்பமாக இருந்த போதிலும் நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலை காரணமாக இம்மாதம் 06ம் திகதியே பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
எனினும் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.








