கடற்கரை கரப்பந்தில் 20 வயது பெண்கள் பிரிவில்  சம்பியனாகியது உடுப்பிட்டி மகளிர் கல்லூரி

0
695 views

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான கடற்கரை கரப்பந்தில் 20 வயது பெண்கள்  பிரிவில் இவ்வருடச் சம்பியனாகியது உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி


வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான கடற்கரை கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் நேற்று வல்வை உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதில் பெண்களுக்கான இறுதியாட்டத்தில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியும் வவுனியா ஸ்ரீசுமணா வித்தியாலயமும் பலப்பரீட்சை நடத்தின.
மூன்று செற்களைக் கொண்ட இச்சுற்றுப்போட்டியில் 21:11 21:10 என்ற புள்ளிகளைப்பெற்று 2:0 நேர் செற்கணக்கில் வெற்றி பெற்று இவ்வருட சம்பியனாகியது உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மகளிர் அணி.
இப்போட்டியில் மூன்றாமிடத்தை பெற்றது பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப்பாடசாலை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here