கடற்கரை கரப்பந்தில் 20 வயது ஆண்கள் பிரிவில்  சம்பியனாகியது தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை ம. வி

0
993 views

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான கடற்கரை கரப்பந்தில் 20 வயது ஆண்கள் பிரிவில் இவ்வருடச் சம்பியனாகியது  தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை  மகா வித்தியாலய  அணி

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான கடற்கரை கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின்  இறுதியாட்டம் நேற்று வல்வை  உதயசூரியன்  விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதில் ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயமும் வவுனியா  பளை மத்திய கல்லூரியும்  பலப்பரீட்சை நடத்தின.

மூன்று  செற்களைக் கொண்ட  இச்சுற்றுப் போட்டியில்  முதல் செற்றை 21:18 என்ற புள்ளியைப் பெற்று பளை மத்திய கல்லூரி  வெற்றி பெற்றது. இதனையடுத்து  இரண்டாவது செற்றை வெற்றி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் களமிங்கிய தொண்டைமனாறு அணி 21:10 என்ற புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்று ஆட்டத்தை 1:1 என சமனிலைப்படுத்தியது. இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிப்பற்கான  மூன்றாவது செற்றில் 15:7 என்ற புள்ளிகளைப் பெற்று  2:1 என்ற  செற்கணக்கில் வெற்றி பெற்று இவ்வருட சம்பியனாகியது  தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய அணி.

இப்போட்டியில் மூன்றாமிடத்தை  கிளிநொச்சி பாரதி  வித்தியாலய அணி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here