சுனாமி தொடர்பான எச்சரிக்கையை அடுத்து கரையோர மக்கள் பெரும் பீதியை எதிர்நோக்கியுள்ளனர்.
சுனாமி எச்சரிக்கை மையத்தால் இன்று மதியம் விடுக்ஙப்பட்ட அபாய எச்சரிக்கையை அடுத்து கரையோர மக்கள் பிரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வடமராட்சி வலயத்துக்குட்பட்ட கரையோரப் பாடசாலைகள் நண்பகலுடன் மூடப்பட்டன.குறிப்பாக பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மெதடிஸ்த பெண்கள் உயர்சரப்பாடசாலை உட்பட பல பாபசாலைகள் மூடப்பட்டன. வல்வெட்டித்துறையில் பாடசாலைகளும் மூடப்பட்டன.
பிந்திய செய்தி
இலங்கை கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே இன்று காலை ஏற்பட்டிருந்த சுனாமி பற்றிய பீதி குறித்து மக்கள் அச்சப்படத்தேவையில்லை என்று இலங்கை வளி மண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.








