வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக பொலிஸ் மா அதிபர் யாழ் ஆயரிடம் தெரிவித்துள்ளார்.வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ் மாஅதிபர் யாழ் மறைமாவட்ட ஆயரை இன்று மாலை ஆயர். இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர் குறித்த கலந்துரையாடலின் பின் ஊடகங்களிடம் யாழ் ஆயர் கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
தற்போதைய பொலிஸ் மா அதிபர் எஸ்எஸ்பியாக, டிஐஜியாக யாழ் மாவட்டத்தில் கடமையாற்றி இருந்த ஒருவர் அவருக்குயாழ்ப்பாணம் நன்றாக தெரியும். யாழ்ப்பாண மாவட்டத்தின் மீது நல்ல விருப்பம் கொண்டவர்.இன்றைய தினம் இங்கே உள்ள பிரச்சினை தொடர்பில் ஆராய யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்து வந்து என்னையும் சந்தித்துள்ளார்.
இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பில்லாதன் விரக்தி நிலை காரணமாகவே போதைப் பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது.
அதேபோல பொலிசார் பொதுமக்களுடன் கூடுதலாக பழகவேண்டும் மக்களுக்கு சேவை செய்யத்தான் போலீசார் இவர்கள் ராணுவம் அல்ல எனவே மக்களுடன் உறவினைப் பேண வேண்டும் முன்னைய காலத்தில் வீதி போக்குவரத்து விதிமுறைகள் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டது அதனை மீண்டும் பாடசாலைகளில் ஆரம்பிக்குமாறு நான் கூறி இருக்கின்றேன்.
அதாவது ஆரம்பிப்பதோடு மாத்திரமல்லாமல் விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் அத்தோடு இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பின்மை காரணமாகவே வடக்கில் வாள்வெட்டு சம்பவங்கள், வன்முறை சம்பவங்கள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துகாணப்படுகின்றன வேலையில்லாது சும்மா இருப்போருக்கு காசு தேவைப்படும் போது தான் அவர்களை திருடுவதற்கு தூண்டுகின்றது என தெரிவித்திருந்தார்.
மக்களுக்கு சேவை செய்ய தான் போலீசார் ஆகவே போலீசார் அதிக அளவில் மக்களுடன் தொடர்பினைபேண வேண்டும் குறிப்பாக போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டப்பணம் விதிப்பதை விடுத்து அவர்களை ஒரு மணிநேரம் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு விளக்கம் அளிப்பதன் மூலம் தான் எமது மக்களுக்கு அதன் அர்த்தம் புரியும்.
அதனை செயற்படுத்துவதன் மூலம் பொது மக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்த முடியும்.
தமிழ் பொலிசார் எமக்கு கடமைக்கு தேவையாக உள்ளது ஏற்கனவே 500 பேர் மாத்திரமேகடமையாற்றிவருகிறார்கள்
மேலதிகமாக தமிழ் போலீசார் நமக்கு தேவையாக உள்ளார்கள் அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வடக்கு மாகாணத்தில் பயிற்றுவிக்கப்படும் ஏனெனில் வடக்கில் இருந்து வெளி மாவட்டங்களில் சென்று பயிற்சி பெறுவதற்கு பலர் விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. வடக்கிலிருந்து பொலிசுக்கு விண்ணப்பிப்போருக்கு இங்கேயே பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு மொழிப் பயிற்சியும் வழங்கப் படும் என பொலிஸ் மாஅதிபர் கூறியதாகவும் தெரிவித்தார்









