வல்வெட்டித்துறை நகரசபையில் ரெலோவிற்கே அதிக ஆசனங்கள் உள்ளது. இங்கே தவிசாளரை ரெலோவே நியமிக்கின்றது. இம்முறையும் சதீஸையும் ரெலோவே தவிசாளர் போட்டிக்கு தெரிவு செய்திருந்தது.
கடந்த திங்கட்கிழமை தெணியம்பையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ரெலோ தலைவர் அடைக்கலநாதன் , செயலாளர் கருணாகரன் ஆகியோருடன் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது ரெலோ தலைமையால் அளிக்கப்பட்ட விளக்கத்தில் சதீஸ் 3 மாதங்கள் தவிசாளராக செயற்படுவார் என்றும் பின்னர் பதவி விலகி தமிழ் தேசியக்கட்சியின் சிவஞானசுந்தரம் தவிசாளராக ஆவதற்கு வழிவிடுவார் என்று விளக்கமளிக்கப்பட்டது. உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் நீடிக்கப்பட்டால் உபதவிசாளராக கடமையாற்றிய கேசவனையும் தவிசாளராக நியமிப்பது என்று கூறப்பட்டது.
இந்த விடயத்தை கேசவன் ஏற்றுக் கொள்ளவில்லை.
கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களில் உபதவிசாளராகவிருந்த கேசவனும் தவிசாளராக போட்டியிட விரும்பியிருக்கின்றார்.
தவிசாளர் பதவி கிடைக்காகதவிடத்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளமாட்டேன் எனக்கூறியிருக்கின்றார்.
அவரை சமாதனப்படுத்தும் முயற்சிகள் நடந்ததாக அறியப்படுகிறது.
அந்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் கேசவன் சுயேட்சைக்குழுவிற்கு அளித்த வாக்கு கூட்டமைப்பின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.









