எல்லே தொடரில் வெள்ளிப்பதக்கத்தினை பெற்றது வல்வை அணி

0
868 views

எல்லே தொடரில் வெள்ளிப்பதக்கத்தினை (இரண்டாமிடத்தினை) பெற்ற வல்வை அணி

பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டு விழாவின் பெரு விளையாட்டுக்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நேற்றைய தினம்(23/02/2020) எல்லே தொடரனாது நடைபெற்றது.

இத் தொடரின் முதல் போட்டியில் வல்லியானந்தம் அணியை 3:2 வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்தில் 5:1 என அல்வாய் நண்பர்கள் அணியினையும் வீழ்த்தி இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது வல்வை அணி.
இறுதியாட்டத்தில் வல்வை அணியானது பருத்தித்துறை ஐக்கிய அணியுடன் மோதியது. இவ் இறுதியாட்டத்தில் 5:2 என பருத்தித்துறை ஐக்கிய அணி வெற்றி பெற்று சம்பியனாக வல்வை அணி 2ம் இடத்தினை பெற்று மீண்டுமொரு வெள்ளிப் பதக்கத்தினை தன்வசப்படுத்தியது.
வாழ்த்துக்கள் வீரர்களே….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here