வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா தெரிவாகியுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது.
இன்றைய அமர்வு கடுமையான சுகாதார நடைமுறைகளுக்கு உள்பட்டு நடத்தப்பட்டது.
வல்வெட்டித்துறை நகர சபை தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே புதிய தலைவரைத் தெரிவு இடம்பெறவிருந்தது.
சுயேட்சைக் குழு 4 ஈபிடிபி 2 , சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1 ,தமிழர் விடுதலைக் கூட்டணி 1 அத்துடன் கூட்டமைப்பின் அதிருப்தி உறுப்பினர் உப தவிசாளர் திரு கேசவனின் வாக்கு உட்பட 9 வாக்குகள் பெற்று சுயேட்சைக்குழு வெற்றி பெற்றுள்ளது.











