வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு நாளை 22/09/2021 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு வல்வெட்டித்துறை நவீன சந்தை மேல் மாடி (மரக்கறி சந்தைக்கு மேலேயுள்ள) மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபை தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அவரின் இடத்துக்கு மானாங்கானையில் வசிக்கும் திரு சதீஸ் அவர்கள் கூட்டமைப்பால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 ஆசனங்களைக் கொண்டுள்ளது. சுயேட்சைக் குழு 4 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி என்பன தலா 2 ஆசனங்களையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா 1 ஆசனத்தையும் கொண்டுள்ளன.
இந்த நிலையில்,
நேற்று முன்தினம் தெணியம்பையில் அடைக்கலநாதன் மற்றும் மட்டக்களப்பிலிருந்து வருகை தந்திருந்த ஜனா உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இம்முறை கூட்டமைப்புக்கும் சுயேட்சைக்குழுக்களுக்கும் பலத்த போட்டி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த சில வருடங்களாகவே வல்வெட்டித்துறை நகரசபையானது மக்களின் அதிருப்திகளினுடனேயே பயணிப்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக தெரிவு செய்யப்படும் நகரசபைத் தலைவர் எமது மக்களின் நன்மதிப்பைப் பெற்று பணியாற்றுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்








