வடபகுதி கடலில் இறக்கப்படும் பேருந்துகள்

0
758 views

வடக்கு கடலில் கடல் உணவுகளின் இனப்பெருக்கத்தினை அதிகரிப்பதற்காக புதிய நடவடிக்கை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது.

கடலுணவுகளின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை அடையாளம் கண்டு குறித்த பிரதேசங்களில், பாவனைக்கு பயனற்று கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை இறக்கி விடுவதன் மூலம் மீன் இனங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் திட்டமே இதுவாகும்.

இதன் முதற் கட்டத்தில் சுமார் 40 பேருந்துகளை கடலில் இறக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவது தொகுதி பேருந்துகளை ஏற்றிய சாயுரு எனும் கடற்படைக் கப்பல் அடையாளப்படுத்தப்பட்ட கடல் பகுதியை நோக்கிய தனது பயணத்தினை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here