உடுப்பிட்டிச் சந்தையில் நேற்று 46 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இமையாணன் பகுதியில் கொவிட் தொற்று நோயாளியுடன் தொடர்புபட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டவர்கள், தொடர்புடையவர்கள் உடுப்பிட்டி மரக்கறிச் சந்தை வியாபாரிகள், நெல்லியடிச் சந்தை கொரோனா நோயாளியுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் என 46 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
இப் பரிசோதனை முடிவுகளின்படி ஒருவருக்கும் கொரோனாத் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.







