தமிழ் பேசும் மக்களின் வாழும் உரிமையை உறுதி செய்யும் வகையில் நீதிகோரி பொத்துவிலில் ஆரம்பித்து வடக்கு கிழக்கு சிவில் அமைப்பினரால் முன்னெடுத்துவரும் மக்கள் எழுச்சிப் பேரணி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் அளவில் வடமராட்சி எல்லையை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தின் உயிர்நாடி வழியே விடுதலைக்கு வழிசமைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த பேரணியை வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி எல்லையில் வரவேற்க அணி திரண்டு வாருங்கள்.
வடமராட்சி எல்லைப்பகுதி ஆரம்பமாகும் வல்லைவெளி இரும்புப் பாலத்தடியில் இருந்து அணிவகுக்க வடமராட்சி இளையோர் ஆர்வத்துடன் முன்வந்துள்ளனர்.
வடமராட்சியில் சிறந்த வரவேற்பை வழங்கி பேரணியில் பங்கேற்று பலம் சேர்க்க முன்னெடுத்த ஏற்பாட்டிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இது கட்சி, அரசியல் கடந்த இனத்திற்கான அழைப்பு.
எமது உணர்வு! எமது உரிமை! என்ற பொதுமை அடையாளத்தில் அணிதிரள்வோம் வல்லைவெளியில்…..
குறித்த வழித்தடத்தில் உள்ள ஆர்வலர்களும் நீதிக்கான பேரணியை வரவேற்கவும், அணி சேர்ந்து பலம் சேர்க்கவும் முன்வரவும்.
எமது உணர்வு! எமது உரிமை!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை இணைவோம் தமிழர்களாய்!
‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’ நடைபயணத்துக்கான இன்றைய வழித்தடம்.
கிளிநொச்சி டிப்போ சந்தியில் காலை 8 மணிக்கு தொடக்கம்.
பரந்தன்
இயக்கச்சி
பளை
கொடிகாமம்
சாவகச்சேரி
கைதடி
நாவற்குழி
அரியாலை
யாழ் நகரம்
யாழ் பொதுநூலகம்
யாழ்/உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம்
யாழ் பல்கலைக்கழகம்
நல்லூர் தியாகதீபம் நினைவிடம்
கல்வியங்காடு
கோப்பாய்
நீர்வேலி
வல்லைவெளி
புறாபொறுக்கி சந்தி
கரணவாய்
நெல்லியடி
மாலுசந்தி
மந்திகை
பருத்தித்துறை
திக்கம்
அல்வாய்
வதிரிச்சந்தி
உடுப்பிட்டி
வல்வெட்டித்துறை தீருவில் வெளி
வல்வெட்டித்துறை நகரம்
நெடியகாடு
பொலிகண்டி நிறைவிடம்








