முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி அழிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் நிர்மாணிக்க துணைவேந்தர் உறுதி

0
605 views

யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியைக் கட்டுவதற்குத் துணைவேந்தர் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளதை அடுத்து உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நிறைவு செய்வதற்குச் சம்மதித்துள்ளார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை 3 மணியளவில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்தித்த துணைவேந்தர் இந்த வாக்குறுதியை வழங்கியிருக்கிறார். அதன் படி இன்று காலை 7.00 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here