வடமாகாண பாடசாலைகள் அனைத்தும் நாளை முதல் இயங்கும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு இளங்கோவன் அவர்கள் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் புரேவி புயல் காரணமாக கனமழை பெய்துள்ளது. இதனால் இன்றைய தினமும் இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
நாளைய தினம் வழமையான சுகாதார நடைமுறைக்கேற்ப தரம் 6 முதல் 13 வரையான வகுப்புக்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் கொரோனா அச்சம் காரணமாக கடந்த 24ம் திகதியிலிருந்து மூடப்பட்டு மீண்டும் நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ளது. வடமாகாண ஆளுநரின் பணிப்பிற்கேற்ப கடந்த 3,4ம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு காலநிலை சீரின்மையால் இன்றும் விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் நாளை பாடசாலை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது








