வடமராட்சியின் சுப்பர்மடம் MW ஐஸ் தொழிற்சாலை முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
வடமராட்சியின் பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறையிலிருந்து பேலியகொடவிற்கு பெருமளவான மீன் ஏற்றுமதி குறித்த நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகின்து.
இதன் அடிப்படையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில்
பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்த நிலையில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மூவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட மூவரும் குறித்த தொழிற்சாலையிலிருந்தே பேலியகொடவிற்கு சென்று திரும்பியிருக்கின்றனர்.
அந்நிலையிலேயே குறித்த தொழிற்சாலை முடக்கப்பட்டு இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு பணியாற்றியவர்களை இனங்காணும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.








