மேல் மாகாணத்தில் அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டம்

0
442 views

நாளை நள்ளிரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை, மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல்
அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை காலை வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அந்த பிரதேசங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here