வளரும் இளம் கலைஞர் பாஸ்கரனின் சாதனை

0
576 views

மதவடி , வல்வெட்டித்துறையை சேர்ந்த பாஸ்கரன் தலைகீழாக நின்று அசத்தலாக மகாதேவர் சிவனின் உருவத்தினை வரைந்திருக்கின்றார். பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் வகையில் அவரது சாதனை உலகெங்கும் சுற்றி வருகின்றது. இளம் வயதிலேயே அவர் செய்த செயல் உண்மையிலேயே பாராட்டிற்குரியது.

 

 

கல்வி கற்கும் சிறு வயதில் இருந்தே ஓவியக்கலையில் நாட்டம் கொண்டிருந்த பாஸ்கரன் பல வகையான ஓவியப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளையும் பெற்றிருந்தார்.

வல்வெட்டித்துறையில் வரையப்பட்ட சுவர் ஓவியங்களில் இவரது கைவண்ணங்களும் அடங்கியுள்ளன.

வல்வையின் வளரும் இளம் கலைஞர் பாஸ்கரனுடைய திறமைகள் மென்மேலும் வளர எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்…. அவரது அயராத முயற்சி , பயிற்சி என்பன மேலும் சிறப்பாக தொடர வாழ்த்துகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here