துரித அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் மற்றுமோர் மைல்கல்.

0
612 views

எமது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் புதிதாக புனரமைப்பு செய்யப்பட்ட சிறுவர் மருத்துவ விடுதி (விடுதி இலக்கம் 08) இன் கையளிப்பு நிகழ்வானது 07.09.2020 அன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் கௌரவ ஆளுநர் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இக் கையளிப்பு நிகழ்வின் நேரடிக் காட்சிகள் வழமை போன்று எமது முகநூல் தளத்தில் நாளை காலை 10.30 மணிக்கு.

இவ் விடுதியினை முழுமையாக புனரமைப்பு செய்வதற்குரிய நிதிப்பங்களிப்பினை புற்றளை பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த அமரர் விஜயரட்ணக்குருக்கள் ஞாபகார்த்தமாக, வல்வெட்டித்துறை அம்மன் கோயிலடியை சேர்ந்த திரு திருமதி மாதவன் ஐயா கீதா குடும்பத்தினர் (சுவிற்சர்லாந்து) வழங்கியுள்ளனர். இவர்களுக்கு வைத்தியசாலை சமூகம் சார்பாக எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வைத்தியசாலை அபிவிருத்திக்கு அனைவரும் கை கோர்ப்போம்.

ஆதார வைத்தியசாலை பருத்தித்துறை

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here