24 மணிநேரத்தில் 4,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0
668 views

கடந்த 24 மணிநேரத்தில் பிரான்சில் 4,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாத இறுதியின் பின்னர் நாள் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட அதிகளவான கொரோனா தொற்று இதுவாகும்.

பிரான்சில் 229,814 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 12 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் பதிவான மொத்த சாவு எண்ணிக்கை 30,480 ஆகும்.

தீவிர சிகிச்சைப்பிரிவில் 380 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் இந்த எண்ணிக்கை 10 பேரால் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here