நுரைச்சோலை மின் ஆலையில் மின்பிறப்பாக்கி கட்டமைப்பில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும் வரையில், மின் துண்டிப்பை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இதேவேளை, மின்சார விநியோகத்திற்கான நாளாந்த கேள்விக்கு அமைய தேவையேற்பட்டால் மாத்திரம் பகல் நேரங்களிலும் வலயங்களுக்கு அமைய மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என மின்சார சபை அறி்க்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
நான்கு வலயங்களிலும் வார நாட்களில் முற்பகல் 10 மணி முதல் ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்கள் வீதம் பிற்பகல் 5.00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும்.
அதன்படி, முற்பகல் 10 மணி முதல் 11.45 வரையும், முற்பகல் 11.45 மணிமுதல் மதியம் 1.30 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரையும் மற்றும் பிற்பகல் 3.15 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, சனிக்கிழமைகளில் 1 மணி நேரம் மின் துண்டிக்கப்படும்.
யாழ் மாவட்ட மின்வெட்டு நேர அட்டவணை
பகல் 11.45 -1.30 , இரவு 7.00-8.00
சூறாவத்தை, மலப்பை,மயிலங்காடு, ஏழாலை, குப்பிளான், கட்டுவன்,
உரும்பிராய், சண்டிலிப்பாய், சுன்னாகம்,ஊரெழு, கரந்தன்,
நீர்வேலி, சிறுப்பிட்டி,
புன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி, ஈவினை, மருதனார்மடம், உடுவில், சங்குவேலி, மானிப்பாய், கட்டுடை, சுதுமலை, இணுவில், கோண்டாவில், கொக்குவில்.
பகல் 1.30-3.15 , இரவு 8.00-9.00
சுன்னாகம், கந்தரோடை, மாசியப்பிட்டி, அளவெட்டி, மல்லாகம், ஏழாலை, தெல்லிப்பளை, பன்னாலை, சிறுவிளான், மாவிட்டபுரம், காங்கேசன்துறை, மயிலிட்டி, தையிட்டி, வறுத்தளைவிளான், வட்டுக்கோட்டை, காரைநகர், இளவாலை, ஊர்காவற்துறை.
பகல் 3.15-5.00 , இரவு 9.00-10.00
நவக்கிரி, புத்தூர், ஆவரங்கால், வீரவாணி,சுதந்திரபுரம்,குட்டியப்புலம்
வசாவிளான்,அச்சுவேலி,இடைக்காடு, வளலாய், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி , சாவகச்சேரி, நுனாவில்
சனிக்கிழமை இரவு நேரம் மட்டும் மின்வெட்டு.








