இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்

0
509 views

இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் 05.08.2020 அன்று நாடுபூராகவும் நடைபெற்றது. அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 6,853,693 வாக்குகளைப் பெற்று 128 ஆசனங்களைக் கைப்பற்றியதுடன் 17 தேசிய பட்டியல் ஆசனங்களுடன் முன்னிலை வகிக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி 2,771,984 வாக்குகளைப் பெற்று 47 ஆசனங்களைக் கைப்பற்றியதுடன் 7 தேசிய பட்டியல் ஆசனங்களுடன் இரண்டாம் நிலையில் உள்ளது.

தேசிய மக்கள் சக்தி 445,958 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற்றியதுடன் 1 தேசிய பட்டியல் ஆசனத்தையும் பெற்று மூன்றாம் நிலையை பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி 327,168 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களைக் கைப்பற்றியதுடன் 1 தேசிய பட்டியல் ஆசனத்தையும் பெற்று நான்காம் நிலையிலுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 67,766 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்துடன் 1 தேசிய பட்டியல் ஆசனத்தையும் பெற்று ஐந்தாம் நிலையிலுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 61,464 வாக்குகளைப் பெற்று 2ஆசனங்ளைக் பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் 67692 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 66,579 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 51, 301 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here