இலங்கையில் வழமைக்கு திரும்பும் பொது போக்குவரத்து! அமுலுக்கு வரும் கட்டுப்பாடுகள்

0
757 views

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவைகள் வழமையை போன்று நடாத்தி செல்வதற்கு போக்குவரத்து அமைச்சினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை கடுமையாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவு்ளளதாக தெரிவிக்கப்படுகின்றுது.

ஆசன எண்ணிக்கைகளுக்கு மாத்திரம் பயணிகளை அழைத்து செல்வது கட்டாயமாகும். அனைத்து பயணிகளும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.

முக கவசமின்றி பொது போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்படாது.

அத்துடன் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களுக்கு அருகில் கை கழுவும் வசதி தொடர்ந்து வழங்கப்படும்.

அனைத்து பேருந்துகளிலும் 100வீத ஆசனங்களில் 50 வீதம் நிறம்பியவுடன் பயணங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இடையில் ஏறும் பயணிகளுக்கு இடமளிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here