அன்று அமெரிக்கா கியூபாவை அழிக்க பெருளாதார தடைகளை விதித்து அடக்கி ஒடுக்கியது. மற்றைய வல்லரசுகளும் அமெரிக்காவுக்கு பயந்து உதவி செய்ய மறுத்தது. அவ் இடரின் குறுகிய காலத்தில் மருத்துவமனைகளை அமைத்து கியூபா மக்களை காப்பாற்றினார் பிடல் கஸ்ரோ.
அன்று பிடல் கஸ்ரோவின் வாயில் இருந்து உதிர்ந்த வார்த்தைகள் ” எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் உலகில் இடர் ஏற்படும் வேளையில் எமது மருத்துவர்களை நாங்கள் நிச்சயமாக அனுப்பி வைப்போம்” .
உதிர்ந்த வார்த்தைகள் நிதர்சனமாக இன்று…. கொரோனாவின் கோரப்பசியில் சிக்கித்தவிக்கும் இத்தாலிக்கு மருத்துவ பணிக்காக சென்றுள்ளனர் 52 கியூபா வைத்தியர்கள்.













