யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட வீதி ஓட்ட நிகழ்வில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான நிகழ்வில் மானிப்பாய் இந்துக் கல்லூரியைச்சேர்ந்த சுஜீகரனும் 20மேற்பட்டவர்களுக்கான நிகழ்வில் கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த மகிழனும் முதலாமித்தைப் பெற்றுக் கொண்டனர்.
யாழ் மாட்டச் செயலகமும் யாழ் மாவட்ட அமெச்சூர் மெய்வன்மைச்சங்கமும் இணைந்து நடாத்திய 15 கிலோமீற்றர் வீதியோட்ட நிகழ்வு இன்று கரவெட்டி பிரதேச செயலகத்தின் முன்பாக இடம்பெற்றது.
கரவெட்டி பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பமான இவ்வீதியோட்டம் நெல்லியடிச் சந்தியூடாக வதிரிச்சந்தி, உடுப்பிட்டிச்சந்தி, நாலாம் சந்தி, வல்லைச் சந்தி, யாழ் பருந்தித்துறை வீதியூடாக மீண்டும் போட்டி ஆரம்பமான இடத்தில் நிறைவடைந்தது. இதில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான நிகழ்வில் மானிப்பாய் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த எஸ். சுஜீகரன் 57 நிமிடங்கள் 11 செக்கன்களில் ஓடி முடித்து முதலாமிடத்தையும், அண்ணா சிலையடி இளைஞர் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.அபிசன் 1 மணித்தியாலயம் 7 செக்கன்கள் 4 வினாடிகளில் ஓடி இரண்டாமிடத்தையும், அதே கழகத்தைச் சேர்ந்த வை.ஆகாஷ் 1 மணித்தியாலயம் 7 செக்கன்கள் 6 வினாடிகளில் ஓடி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
அதே நேரம் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எம்.மகின் 57நிமிடங்கள் 58 செக்கன்களில் ஓடி முதலாமிடத்தையும், சோழங்கன் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எம் அனோஜன் 1மணித்தியாலயம் 04 நிமிடங்கள் 3செக்கன்களில் ஓடி இரண்டாமிடத்தையும், நீர்வேலி ஜக்கிய விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எஸ். கஜரூபன் 1மணித்தியாலயம் 7நிமிடங்களில் ஓடி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.










