சிறப்பாக நடைபெற்ற புலமைப்பரிசில் வகுப்புக்கள் ஆரம்ப விழா

0
1,006 views

உதயசூரியன் கழகம் பிரித்தானியவின்  முழுமையான ஆதரவுடன், வல்வை விக்னேஸ்வரா சனசமூகசேவா நிலையமும் வல்வை உதயசூரியன் கழகமும் இணைந்து நடாத்தவிருக்கும் புலமைப்பரிசில் வகுப்புக்கள், வல்வை உதயசூரியன் கழக மண்டபத்தில் தலைவர் சி.மோ.சிவமயம் தலைமையில் இன்று 03.01.2020 மாலை 05.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கழக அங்கத்தவர்களால் மங்கள விளக்கேற்றல் வைபவம் இடம் பெற்றது. அதனைத்தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்றன. கலந்து கொண்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இறுதியாக கல்வி கற்பிக்கவிருக்கும் ஆசிரியர் திரு.கி.ஜெனத்மேனன் அவர்களால் ஆரம்ப நாள் வகுப்பு நடாத்தப்பட்டு இன்றைய நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here